கதிராமங்கலம் மக்களை விடுதலை செய்.. டிராபிக் ராமசாமி தற்கொலை முயற்சி!

traffic-ramaswamy

கதிராமங்கலத்தில் ஓன்ஜிசிக்கு எதிராக போராடி கைதான 10 பேரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி டிராபிக் ராமசாமி வங்கி கட்டடத்தில் மீது ஏறி தற்கொலை செய்வதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை, பாரிமுனையில் உள்ள வங்கி அலுவலகம் கட்டடம் மீது ஏறி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தற்கொலை செய்வதாக அறிவித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதற்கு அவர் கீழே இறங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றார்.

மேலும், கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக அதிமுக அரசு விடுதலை செய்ய வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Related Topics:Tamilnadu News