காதலிக்க மறுத்த இளம்பெண்ணை குத்தி கொலை செய்த சைக்கோ வாலிபர்.!

one side love young girl killed youth is angry
காதலிக்க மறுத்த இளம்பெண்ணை குத்தி கொலை செய்த சைக்கோ வாலிபர்.!

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை குத்தி கொலை செய்த சைக்கோ வாலிபர்.!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஜானகி (24). ஐதராபாத்தில் உள்ள டிமார்ட் என்ற சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். அங்கு தனியாக வாடகைக்கு வீடு பிடித்து தோழியுடன் தங்கி இருந்தார்.

ஜானகி பணிபுரிந்த அதே சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்த ஆனந்த் என்ற ஊழியர் காதலித்தார். தனது காதலை அவர் ஜானகியிடம் தெரிவித்த போது ஏற்க மறுத்துவிட்டார். என்றாலும் தொடர்ந்து தனது காதலை வெளிப்படுத்தி வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு ஆனந்த் ஜானகியை சந்தித்து என்னை திருமணம் செய்து கொள், இல்லையெனில் உன்னை கொலை செய்து விட்டு நானும் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினார்.

இது பற்றி ஜானகி தான் பணிபுரியும் நிறுவனத்தின் நிர்வாகிகளிடம் புகார் செய்தார். உடனே ஆனந்தை வேறு கிளைக்கு மாற்றிவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் நேற்று முன்தினம் ஜானகி தங்கி இருந்த வீட்டுக்கு கத்தியுடன் வந்தார். அங்கு தோழி இல்லை. அவர் சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்று இருந்தார். ஜானகி மட்டும் தனியாக இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டுக்குள் புகுந்த ஆனந்த் ஜானகியுடன் தகராறு செய்து கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் ஜானகி கீழே சாய்ந்ததும் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கட்டிய பின்பு தப்பி ஓடிவிட்டார். ஜானகி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

இதற்கிடையே நேற்று ஊரில் இருந்து வீடு திரும்பிய தோழி ரூபா, வீடு வெளிப் புறமாக பூட்டப்பட்டு இருப்பதையும் உள்ளே ஜானகி ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஜானகியை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றார். டாக்டர்கள் அவரை பரி சோதித்து விட்டு இறந்து விட்டதாக அறிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தப்பி ஓடிய சைக்கோ வாலிபர் ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.

Related Topics:Online tamil news