நெப்போலியன் பிராந்தி கொடுக்காத ஊழியரை கரடு முரடாக தாக்கிய குடிமகன்கள்.! கோவையில் பயங்கரம்!

wineshop attack coimbatore
நெப்போலியன் பிராந்தி கொடுக்காத ஊழியரை கரடு முரடாக தாக்கிய குடிமகன்கள்.! கோவையில் பயங்கரம்!

நெப்போலியன் பிராந்தி கொடுக்காத ஊழியரை கரடு முரடாக தாக்கிய குடிமகன்கள்.! கோவையில் பயங்கரம்!

தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக் கன்பாளையத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இங்கு மதுரை மேலூரை சேர்ந்த கணேஷ் (41) என்பவர் ஊழியராக வேலை பார்க்கிறார்.

நேற்று முன்தினம் மாலை இந்த டாஸ்மாக் கடைக்கு செட்டி பாளையத்தை சேர்ந்த நாராயணராஜ் (38), அய்யப்பன்(47), சின்னசாமி (42), மலுமிச்சம் பட்டியை சேர்ந்த கவுதம் குமார் (28), ரபிக் (42), கிருபா கரன் (27) ஆகிய 6 பேர் மது அருந்த சென்றனர்.

அவர்கள் கணேசிடம் நெப்போலியன் பிராந்தி கேட்டனர். அதற்கு அவர் இருப்பு இல்லை என்றார். இதனால் ஆவேசமடைந்த 6 பேரும் சேர்ந்து கணேசை அடித்து தாக்கினர். அங்கிருந்த பீர்பாட்டிலை எடுத்து உடைத்து கொன்று விடுவதாக மிரட்டினர்.

கும்பல் தாக்கியதில் காயமடைந்த கணேஷ் இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்.ஐ. கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் கணேசை தாக்கிய நாராயணராஜ் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

Related Topics:Tamilnadu News