பராமரிப்பு இன்றி அரசு பஸ், காற்றில் பறந்த மேற்கூரையால் பரபரப்பு!

தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களின் நிர்வாக குறைபாடு காரணமாக போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதனால் பஸ்களை பராமரிக்க கூட உதிரிபாகங்கள் இல்லாமல் தவித்து வருகின்றன.
அப்படி பராமரிப்பு இன்றி இயங்கும் அரசு பஸ்கள் ஆங்காங்கே மக்கர் ஆகி நின்று பயணிகளுக்கு பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து, வெள்ளிகுட்டைக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் பஸ்ஸின் மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டது. அந்த மேற்கூரை இரும்பு தகடு என்பதால் ரோட்டில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

Related Topics: Tamil Online News Live