கோடை வெயிலை சமாளிக்க இலவச ஏசி வசதி! உங்கள் வீட்டில் நீங்களும் செய்து பாருங்க

உங்கள் வீடு காங்கிரீட்டில் கட்டப்பட்டு மொட்டைமாடியில் வெயில் கொதித்து (அது சிமென்ட் தரையோ, சதுர ஓடுகள் பதித்ததோ) அதன் சூடானது அந்த மொட்டை மாடித் தரை வழியே கீழிறங்கும்.

மதிய நேரத்தில் வெறும் காலில் உங்களால் அந்தத் தரையில் ஒரு நொடி கூட நிற்க முடியாத அளவிற்கு சூடேறி இருக்கும்.

பகல் முழுவதும் இப்படி அடுப்பில் வைத்த இட்லிக் குண்டானைப் போல இருக்கும் உங்கள் மாடித் தரையானது, மாலையில் குளிர்ந்திருக்கும். ஆனால் அந்தச் சூடு மெதுவாகக் காங்கிரீட்டினுள்ளே புகுந்து இப்பொழுது அடிப்பாகத்தை எட்டி இருக்கும். ஆக, பகலில் வீட்டின் உள்ளே மேல் பாகத்தில் குளிர்ச்சியாகவும், மாடித்தரையில் சூடாகவும் இருந்த இடம், இப்பொழுது அப்படியே தலைகீழாக மாடித்தரை குளிர்ச்சியாகவும், வீட்டினுள்ளே சீலிங் அதிக சூடாகவும் இருக்கும்.

இதனால்தான் இரவில் மின்விசிறியைப் போட்டதும் சூடான காற்று உள்ளே இறங்கி இயற்கையான ஹீட்டரைப் போல உங்களை வேகவைக்கும். ஆக, வெயில் சூட்டிலிருந்து உங்கள் மொட்டை மாடித் தரையைப் பாதுகாத்தால் அதன் வழியே உங்கள் வீட்டினுள்ளே சீலிங் வழியாக சூடான காற்று வீட்டிற்குள் வருவது தடுக்கப்படும். இதற்கு என்ன செய்யலாம்?

மாடித் தரைக்கு வெள்ளை அடித்தல்:

இதை எளிமையாகப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், வெள்ளை நிற சுண்ணாம்பை மாடித் தரையில் திக் காக அடிப்பதன் மூலம், வெண்மை நிறம் வெயிலை பிரதிபலிக்கச் செய்து அதன் சூட்டினை தரைக்கு இறங்காமல் செய்கிறது. இப்படி வெள்ளை அடிக்கப்பட்ட மாடித் தரையில் நீங்கள் 45 டிகிரி வெயில் அடித்தாலும் வெறும் காலில் நிற்கலாம், குளிர்ச்சியாகவே இருக்கும்.

நீங்களும் செய்து பாருங்களேன்.

Related Topics: Tamil Online News Live