தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வை உதடு கிழியும் வரை சரமாரியாக தாக்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்..! நடந்தது என்ன தெரியுமா..!!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வை உதடு கிழியும் வரை சரமாரியாக தாக்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்..! நடந்தது என்ன தெரியுமா..!!

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஏழுமலை. இவர் பூந்தமல்லி தொகுதியை சேர்ந்தவர்.

எம்எல்ஏ ஏழுமலை திருவள்ளூரை அடுத்து வெள்ளவேடு அருகேயுள்ள கிராமத்தில் துக்க நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள சென்றார்.

அந்த நிகழ்ச்சியை முடித்த அவர் நேற்று இரவு அவரது காரில் திரும்பிக்கொண்டு இருந்தார்.

நைனா கண்ணு என்ற அதிமுக தொண்டர் ஏழுமலையின் காரை வழிமறித்து கார் கண்ணாடியை உருட்டு கட்டையால் அடைத்து உடைத்துள்ளார்.

இதில் கார் கண்ணாடி உடைந்து ஏழுமலையில் உதட்டை கிழித்தது. இதனையடுத்து ரத்த காயத்துடன் ஏழுமலை திருவள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எம்எல்ஏ ஏழுமலையை தாக்கிய அதிமுக தொண்டர் நைனா கண்ணு ஓபிஎஸ் ஆதரவாளர் என கூறப்படுகிறது.

இதனையடுத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Related Topics:Tamil News News