ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் ஸ்டாலின்..!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார்.

இன்று காலை ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், போர் வரும்போது பார்த்துக்கொள்வோம்; போருக்குத் தயாராகுங்கள் என தெரிவித்தார்.

இந்நிலையில், தேர்தலைத்தான் போர் என ரஜினிகாந்த் மறைமுகமாக தெரிவித்ததாகவும் அவர் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி எனவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Topics: Tamilnadu news