சிங்கப்பூரில் ஒரு சொட்டு மழைநீரை கூட வீணடிக்காமல் குடிநீராக மாற்றும் அரசு!

சிங்கப்பூரில் பல மணிநேரம் மழை பெய்தாலும் அந்த நீரில் ஒரு சொட்டு கூட வீணடிக்கப்படாமல் சேகரித்து, அந்த நீரை குடி நீராக பயன்படுத்துகின்றனர்.

அதனால் அந்த ஊரில் குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டதே இல்லை. மழைக்காலங்களில் மழைநீரை சேகரித்து ஏரி அல்லது குளங்களில் சேமிப்பது, வீடுகளில் மழைநீர் தொட்டிகள் அமைத்து நிலத்தடி நீராதாரம் செய்வது போன்றவைகளை செய்தால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே வர வாய்ப்பில்லை. வடகிழக்கு பருவ மழை நமக்கு பெரிதும் கை கொடுக்கிறது. அந்த மழை நீரை வீணாக கடலில் கலக்க விடுகிறோம்.

பொதுப்பணித்துறை ஏரி,குளங்களை தூர் வாரி மழை நீரை சேமிக்க எவ்வித முன்னேற்பாடுகளும் செய்வதில்லை. அரசு அதிகாரிகள் திட்டமிட்டு செய்யபததால் பல திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதில் தாமதம் அடைகிறது அல்லது சேராமலேயே வீணடிக்கப்படுகிறது.

சிங்கப்பூராக மாற்றுவோம் என அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர். குடிநீர் பிரச்சனைக்கு மட்டுமாவது சிங்கப்பூரை பின்பற்றினால் நாடும் நலம் பெறும்.

அடிப்படை தேவையான தண்ணீர் பிரச்னையையே தீர்க்க முடியாத அரசுகள் எங்கனம் தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றுவார்கள் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது.

Related Topics: Tamil Online News Live