முதல்வர் மாவட்டத்தில் குண்டும், குழியுமான சாலை! அமைச்சராக இருந்தே கவனிக்கவில்லை

சேலம் மாநகரில் பாதாள சாக்கடை திட்டப்பணி கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இத்திட் டம், அதன் பின்னர் வந்த அதிமுக அரசால் கண்டு கொள்ளப்படவில்லை.

பணி செய்வதில் ஆர்வமின்மை, முறையான நிர்வாகமின்மை உள்ளிட்ட கார ணங்களால், ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகின்றன. சரியான திட்ட மிடுதல்இல்லாததால், மாநகரில் பல்வேறு பகுதிகளில் இன்னும் 30 சதவீதம் கூட பணிகள் முடிக்கப்படவில்லை.

இதனால், சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டத்தை தொடர்ந்து, மின்சார ஒயர் பதித்தல், போன் கேபிள், குடிநீர் பைப் லைன் பதிப்பு என அடுத்தடுத்து பணிகள் மேற்கொள் ளப்பட்டன.
இதனால் அனைத்து சாலைகளும் மரண குழிகளாக காட்சியளிக்கின்றன. மழைக்காலம் என்றால், இரு சக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலை தான் பல் வேறு இடங்களில் காணப்படுகிறது.

சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கிச்சிப்பாளையம் செல்வதற்கு காந்தி சிலை வழியாக சாலை உள்ளது. கிச்சிப்பாளையம், சன்னியாசி குண்டு, எருமாபாளையம், உடையாப்பட்டி தேசிய நெடுஞ் சாலை ஆகிய பகு திகளுக்கு செல்ல இந்த சாலை தான் பிரதானம்.

அப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் நாள் தோறும் இச்சாலையை பயன் படுத்தி வருகின்றனர்.

இதே போல் அப்பகுதிகளில் இருந்து பணி நிமித்தமாக பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், 5 ரோடு, ஜங்சன் மற்றும் ஓமலூருக்கு செல்ல இந்த வழியாக தான் வரவேண்டும். இதனால் நாள் தோறும் நூற்றுக் கணக் கான இரு சக்கரவாகனங்கள் இவ்வழியாக சென்று வருகின்றன.

இந்த சாலையில், காந்தி சிலை முதல் கருவாட்டு பாலம் வரை உள்ள பகுதி கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.

இப்பகுதியில், எலக்ட்ரிக்கல் கடைகள், பேக்கரி மற்றும் உணவகங்கள், ஹார்டு வேர்ஸ் மற்றும் பெயிண்ட் கடைகள், பார்சல் சர்வீஸ் நிறுவனம் என 60க்கும் மேற் பட்ட வணிக நிறு வ னங் கள் உள்ளன. கடைகளுக்கு பொருட் களை கொண்டு வரவும், இங்கிருந்து கொண்டு செல்லவும், கனரக வாகனங் கள் அடிக்கடி இந்த ரோட் டில் வந்து செல்கின் றன. குறிப்பாக, அரசு போக்கு வரத்து கழக பணிமனை ஒன்றும் இங்கு உள்ளது.

நீண்ட நெடுங்காலமாக இந்த சாலை சீரமைக்கப்படாமலே உள்ளது. லேசான மழை பெய்தாலே, குளம் போல் இந்த சாலை யில் தண்ணீர் தேங்கி விடும். அது போன்ற சமயங்களில், டூவீலர் போக்குவரத்து அடியோடு பாதிக்கப் பட்டு, பொது மக் களும், மாண வர் க ளும் கடும் அவதிக் குள்ளாவார்கள்.

நீண்ட நாள் இழு பறிக்கு பின்னர் தார் சாலை அமைத்தாலும், ஓரிரு வாரங்க ளில் அவை பெயர்ந்து மீண்டும் குழிகள் உண்டாகி விடுகிறது. பாதாள சாக் கடைக்காக அந்த சாலையில் தோண்டப்பட்ட குழிகள் மற்றும் கழிவு நீர் தேக்க தொட்டி பணிகள் இன்னமும் முடிவடையவில்லை.

பல மாதங்களாக அவை சீரமைக்கப்படாமலே உள்ளதால், பல்வேறு விபத் துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதே போல், நீண்ட நாட்களாக சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்களால், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

Related Topics: Tamil Online News Live