எதிர்த்து பேசினா விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவேன்! அரியலூரில் நோயாளியை மிரட்டிய நர்ஸ்.!

poison needle
எதிர்த்து பேசினா விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவேன்! அரியலூரில் நோயாளியை மிரட்டிய நர்ஸ்.!

எதிர்த்து பேசினா விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவேன்! அரியலூரில் நோயாளியை மிரட்டிய நர்ஸ்.!

அரியலூரில் டெங்கு பாதித்த நோயாளியை விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவேன் என நர்ஸ் ஒருவர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தையே மிரட்டி வரும் டெங்கு காய்ச்சலால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அதே போன்று அரியலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு பிரிவில் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் இல்லை என நோயாளிகள் தெரிவித்தனர்.

இதனால் டாக்டர்கள் இல்லாத காரணத்தால் பொதுப்பிரிவில் உள்ள நர்ஸ்களே ஊசி போடுவதாகவும் கூறினர்.

இது தொடர்பாக மணிமேகலை மற்றும் ஷண்முகப்பிரியா ஆகிய இரண்டு நர்ஸ்களும் குற்றம்சாட்டிய நோயாளிகளை மிகவும் தரக்குறைவாக திட்டியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த நர்ஸ் இப்படி பேசினால் ஊசியை மாற்றி போட்டு விட்டு டெங்குவால் இறந்து போய்விட்டார் என்று கூறிவிடுவேன் என எச்சரிக்கை செய்துள்ளார்.

இதனை கேள்விப்பட்ட நோயாளிகள் அதிர்ச்சியடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Topics:Tamilnadu News