அரசு மருத்துவமனையில் முதியவரை குப்பையில் தூக்கி வீசிய அரசு ஊழியர்கள்..!! திருநெல்வேலியில் பரபரப்பு..!!

நெல்லை அரசு மருத்துவமனையில் முதியவரை குப்பையில் தூக்கி வீசிய அரசு ஊழியர்கள்..!! திருநெல்வேலியில் பரபரப்பு..!!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ் தெரியாத முதியவர், ஆதரவற்ற நிலையில் 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவரது வேலையை அவரால் செய்ய முடியாத நிலையில் அந்த முதியவர் இருந்துள்ளார்.

இதனையடுத்து அவரது நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமானதால் அவர் படுத்த படுக்கையிலே இயற்கை உபாதைகளை கழித்தார்.

இதனால் அவரை பராமரிக்கவும் யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பை மேட்டில் இன்று காலை அவரை ஊழியர்கள் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து குப்பை தொட்டில் வீசப்பட்ட முதியவரை மருத்துவமனை ஊழியர்கள் மீண்டும் மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனையே நோயாளியை ஊழியர்கள் குப்பை மேட்டில் வீசி சென்ற சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Topics:Tamil Nadu News