ஜெயலலிதா மரணம் நமக்கு கற்று கொடுத்த இரண்டு பாடங்கள் என்ன தெரியுமா?

முதலாவது ஆரோக்கியம். இல்லாவிட்டால் நாட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் எமனிடம் தோற்றுப்போகவேண்டும். ஆகவே உடல் நலம் பேணுவோம்.

ஆண்டிற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வோம். தினமும் உடல் பயிற்சி, உடல் எடை மேலாண்மை என ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திடுவோம்.

இரண்டாவதாக, எவ்வளவு பணம் இருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் பிள்ளைகளை, பெற்றோர்களே, மருமகன்களே, மாமியார்களே, அண்ணன், தப்பிகளே, அக்கா தங்கைகளே, அத்தை மாமாக்களே, சித்தி சித்தப்பாக்களே, தப்பி தங்கைகளே இன்னும் மீதமிருக்கும் அனைத்து உறவுகளே ஓடுங்கள், ஏதாவது ஒரு காரணத்தால் பிரிந்திருக்கும் உங்கள் ரத்த உறவுகளை நோக்கி ஓடுங்கள்.

இருக்கும் காலத்திற்குள் பகை மறைந்து இணைந்து வாழுங்கள். உறவின் வலிமையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏன் என்றால் தன் வாழ்கையை ஒரு திறந்த புத்தகம் என்று வாழ்ந்து காட்டிய (ஜெயலலிதா) இவராலேயே உறவுகள் உடனில்லாத காரணத்தால் தனது கடைசி 75 நாட்கள் என்னவென்று கூட அறிய முடியவில்லை.

உண்மையான அன்பின் கண்ணீர் ஒரு சொட்டுக் கூட இவர் உடலின் மேல் விழவில்லை. தரையில் தான் ஆறாய் ஓடியது. நமக்கு இந்த நிலை வேண்டாம்.

உறவுகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உயிர் காக்க மட்டுமல்ல, உயிர் உணர்த்தவும் ரத்த உறவுகள் தேவை. இது தான் கடைசியாக நாம் அவரிடம் கற்ற இரண்டு பாடம்.

Related Topics: Tamil Online News Live