வீட்டு மின் விசிறியுடன் வந்தால் தான் அரசு மருத்துவமனையில் அட்மிட்!?

சேலத்தில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஏசி பழுதாகி 5மாதம் ஆகிவிட்டது.

தற்போது கோடை வெப்பம் அதிக அளவில் இருப்பதால், உள்நோயாளிகள் கடும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்கள் வெப்பத்தை சமாளிக்க தங்கள் வீடுகளில் இருந்து மின் விசிறிகளை கொண்டு வந்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் வீடுகளில் இருந்து மின் விசிறி கொண்டு வந்தால், தான் அட்மிட் செய்வோம் என கூறினாலும் கூறுவார்கள்.

Related Topics: Tamil Online News Live