பெண் குழந்தை பிறந்தால் மனைவியை கணவன் செய்த கொடூர செயல்.!! மனைவிக்கு ஏற்பட்ட கொடுமை..!!

பெண் குழந்தை பிறந்தால் மனைவியை கணவன் செய்த கொடூற செயல்.!! மனைவிக்கு ஏற்பட்ட கொடுமை..!!

பெங்களூர் ஜே.பி.நகரில் வசித்து வருபவர் சேத்தன் . கம்பியூட்டர் என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் பெண் குழந்தை பிறந்ததால் சேத்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

மேலும் சேத்தன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அவர் மனைவி ஹர்சிதாவை அடித்து உதைத்துள்ளார்.

அத்துடன் மாத்திரைகளை கொடுத்து கொல்ல முயற்சி செய்துள்ளனர். மனம் உடைந்த ஹர்சிதா தன்னுடைய மகளை தனது தாயிடம் கொடுத்தார்.

இந்நிலையில் பெண் குழந்தையை வளர்க்க வேண்டும் என்றால் பெற்றோரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு வாங்கி வர சொல்லியுள்ளார்.

இதற்கு சேத்தன் பெற்றோர் அவரது சகோதரி உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களது தொல்லை அதிகமானதால் மனம் உடைந்த ஹர்சிதா காவல் நிலையத்தில்புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சேத்தன் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

Related Topics:Tamil Nadu News