நகைக்கடையில் ரூ.168 கோடி கருப்புப்பணம்.. வருமானவரித்துறை சோதனையில் சிக்கியது.!

black money jewels shop
நகைக்கடையில் ரூ.168 கோடி கருப்புப்பணம்.. வருமானவரித்துறை சோதனையில் சிக்கியது.!

நகைக்கடையில் ரூ.168 கோடி கருப்புப்பணம்.. வருமானவரித்துறை சோதனையில் சிக்கியது.!

தமிழகமெங்கும் சசிகலா உறவினர் மற்றும் அவரது நண்பர்கள் வீடு, கம்பெனி, அலுவலகம் என பல இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் கோடி கோடியாக கள்ளப்பணம் கை மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி கொசக்கடை வீதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி ஜுவல்லரியில் நடந்த வருமானவரி சோதனை நிறைவடைந்துள்ளது.

கடந்த 4 நாட்களாக நடந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றதை அடுத்து கடை திறக்கப்பட்டுள்ளது. லட்சுமி ஜுவல்லர்ஸ் தலைமை அலுவலகத்தில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ரூ.168 கோடி கருப்புப்பணத்தை வெள்ளை ஆக்கியதற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லட்சுமி ஜுவல்லரி மூலம் சசி குடும்பம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கியதாக தகவல் தெரிவிக்கின்றன.

Related Topics:Tamil online news