குழந்தைகள் பாலியலுக்கு பெற்றோரே காரணம்! பள்ளி மாணவிகள் போராட்டம்!

பெங்களூருவில் குழந்தைகள் பாலியல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெங்களூருவில் அதிக அளவில் இது போன்ற சம்பவங்களுக்கு பெற்றோரே காரணம் என பள்ளி மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தினர்.

கணவர், மனைவி தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, டைவர்ஸ் செய்து கொள்கின்றனர். அப்படி டைவர்ஸ் செய்யும் தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் யாராவது ஒருவர் பாதுகாப்பில் வளர்கிறது.

அப்படி வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல், இது போன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. எனவே பெற்றோர்கள் டைவர்ஸ் செய்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி, பள்ளி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு போராட்டம் நடத்தினர்.

Related Topics: Tamil Online News Live