தனுஷ் தங்கள் மகன் என மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கு : தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனவும் தங்களின் அன்றாட மற்றும் மருத்துவ செலவுகளுக்கு மாதம் 65 ஆயிரம் ரூபாயை தனுஷ் வழங்க வேண்டும் எனவும் மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன், மீனாட்சி தம்பதி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் சார்பில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன. எனினும் சான்றிதழ்களில் குழப்பம் இருப்பதால் டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என கதிரேசன் கோரிக்கை விடுத்தார்.

ஏற்கனவே பல்வேறு விசாரணைகள் முடிந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனுஷ் தனது மனுவில் கோரியபடி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Topics: Tamilnadu news