ரூ. 2ஆயிரம் கோடி ஊழல் புகார் சோனியா, ராகுலை தொடர்ந்து பிரியங்காவும் சிக்கினார்!

நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை நடத்தி வந்த ஏ.ஜே.எல்.,அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தபோது, அந்த நிறுவனத்திற்கு 2008ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் வட்டி இல்லா கடன் அளித்தது.

மேலும் சோனியா, ராகுல் இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் 2010ம் ஆண்டு ஏ.ஜே.எல்.,நிறுவனத்தை விலைக்கு வாங்கியது.

அதைதொடர்ந்து, ஏ.ஜே.எல்.,நிறுவனத்தின், 2ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துகளை சோனியாவும் ராகுலும் அபகரிக்க முயன்றதாக, பா.ஜ.,மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி, டில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

யங் இந்தியா நிறுவனம் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், சோனியா ராகுல் ஆகியோருக்கு வருமான வரித்துறை ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் சோனியா மகள் பிரியங்காவும் சிக்கியுள்ளார். முறைகேடு நடக்க உடந்தையாக இருந்ததாக வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா, ராகுலை தொடர்ந்து, பிரியங்காவும் சிக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Topics: Tamil Online News Live