இந்திய விமானங்களில் தொடருது, செக்ஸ் தொந்தரவு…! அலறும் பணிப்பெண்கள், பயணிகள்..!

மும்பையைச் சேர்ந்தவர் லோகேஷ்குமார் மக்வானா. இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாங்க்காக்கில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை வந்தார்.

விமானம் பாங்க்காக்கில் இருந்து இரவு கிளம்பியது. நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்த போது, ’விமானம் குலுங்கலாம், பயணிகளை சீட் பெல்ட் அணியச் சொல்லுங்கள்’ என்று விமான பணி பெண்களிடம் சொன்னார் விமானி.

இதையடுத்து பயணிகள், சீட் பெல்ட் அணிந்திருக்கிறார்களா என விமான பணிப் பெண் சோதனை செய்துகொண்டிருந்தார்.

அப்போது லோகேஷ் குமார் அருகே வந்ததும் அதிர்ச்சியடைந்தார். அவர் அலங்கோலமான நிலையில் இருந்துகொண்டு விமான பணிப் பெண் ணை நோக்கி பல்லைக் காட்டி, அதற்கு வா என்று அழைத்துள்ளார்.

இதைக் கண்டுகொள்ளாத அவர், சீட் பெல்ட் அணியச் சொல்லிவிட்டு தகவலை விமானியிடம் சொன்னார்.

இதையடுத்து மும்பை விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் மாக்வானாவை போலீசார் கைது செய்தனர்.

விமானங்களில் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் கடந்த 2 மாதங்களில் மட்டும் அதிகரித்துள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் டெல்லி-மும்பை விமானத்தில் உடன் பயணித்த பெண் பயணியை ஆபாசமாகத் தொட்டதாக, நாசிக்கைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூர்-மும்பை விமானத்தில், அருகில் இருந்த பயணி, தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகப் பெண் பயணி ஒருவர் புகார் கூறினார்.

டெல்லி- மும்பை விமானத்தில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்தாக ஐடியில் பணியாற்றும் பெண் புகார் கூறினார்.

தற்போது இந்திய விமானங்களில் பயணம் செய்ய, விமானப் பணி பெண்கள் மற்றும் பெண் பயணிகள் அஞ்சுகின்றனர்.

Related Topics : Tamilnadu