காரி துப்பினால் துடைத்துக்கொள்வேன், ஆனால், அவருடன் சென்றால் தற்கொலை செய்வேன் – நா.ச பரபரப்பு!

டிடிவி தினகரனை விட்டு ஓ.பி.எஸ்ஸுடன் செல்லும் நிலை வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் எண்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

அதிமுகவின் முக்கிய அமைச்சர்களும், நிர்வாகிகளும் டிடிவி தினகரனுக்கு எதிராக போர் கொடி உயர்த்தியுள்ள நிலையில் , அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், அவரை தொடர்ந்து ஆதரித்து வருகிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தினகரன் நன்றாக இருந்தால் தான் அதிமுக நன்றாக இருக்கும்,அவரிடம் தான் நீதி உள்ளது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

இதனையடுத்து, சூழலுக்கு தகுந்தாற் போல் மாறினால் பரவாயில்லையா என நாஞ்சில் சம்பத்திடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், இதற்காக என்னை யாரவது காரி துப்பினால் கூட அதை துடைத்து கொள்வேன். ஆனால், தினகரனை விட்டு ஓ.பி.எஸ்யிடம் செல்லும் நிலை ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.

Related Topics – Tamilnadu