காதலி வேறு ஒரு வாலிபருடன்…! நேரில் பார்த்த காதலன் செய்த காரியம்! அடப்பாவிகளா!

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் பினு (25). இவர் பாலிடெக்னிக்கில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே சில நாட்களாகவே அந்த இளம்பெண் பினுவுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் வருத்தமடைந்த பினு, தன் காதலியிடம் ஏன் என்னை புறக்கணிக்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு அந்த இளம்பெண் உன்னை பிடிக்கவில்லை. இனிமேல் என்னிடம் பேச வேண்டாம் என கூறியுள்ளார்.

ஆனால் காதலிக்கு தன்னை பிடிக்காமல் போனதற்கு என்ன காரணம் என பினு விசாரித்திருக்கிறார். அப்போது பினுவின் காதலி வேறு ஒரு வாலிபரை காதலிப்பதும், அவருடன் ஊர்சுற்றுவதும் தெரியவந்தது.

இதனால் மனமுடைந்த பினு இன்று காலை குழித்துறை அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பினுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பினு தற்கொலை செய்தது தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பினுவின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

Related Topic : Taminadu News