சுத்தியலுடன் களமிறங்கிய பெண்கள் – டாஸ்மாக் கடையை சூறையாடினர்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்த பெண்கள் , மதுக்கடையை சூறையாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பூந்தண்டலம் சக்தி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அப்பகுதி பெண்கள் இன்று மதுக்கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் குன்றத்தூர் – ஸ்ரீபெரும்புதூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Topics – Tamilnadu