ஆர்.கே.நகரில் கொடுக்கப்பட்டது அத்தனையும் கள்ள நோட்டா?… ஏர் கூலர் வாங்க போயி, தெறித்து ஓடி வந்த சுமதி… திருப்பி வரட்டும் தொடப்ப கட்டையாலையே அவன…!

ஆர்.கே.நகரில் தினகரன் தரப்பு மூலம் ஒரு ஓட்டுக்கு நன்காயிரமும், திமுக தரப்பு இரண்டாயிரமும் கொடுத்ததை நாம் முன்பே வெளியிட்டிருந்தோம். அதில் பெரும்பாலான நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

எழில் நகரைச் சேர்ந்த சுமதி என்பவர் சென்னை வெய்யிலின் கொடுமை தாங்காமல் ஒரு ஏர் கூலர் வாங்கலாம் என்று முடிவு செய்தார். அவருக்குக் கொடுக்கப்பட்ட நாலாயிரம் ரூபாயில் ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு அருகேயுள்ள வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது 2500 ரூபாயில் ஒரு ஏர் கூலரை தேர்வு செய்தார். அதற்காக ஒரு 2000  ரூபாய் நோட்டும், ஒரு 500 ரூபாய் நோட்டும் கேஷியரிடம் கொடுத்துள்ளார்.

அந்த நோட்டுகளை ஸ்கேன் செய்தபோது அவர் கொடுத்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று கேஷியர் திருப்பி கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த சுமதி இந்த நோட்டு கட்சிக்காரங்க கொடுத்தது எப்படி கள்ள நோட்டா இருக்கும் என்று மல்லுக்கு நின்றிருக்கிறார். ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாதுன்னு எத்தனை அறிவிப்பு வந்தாலும் உங்களுக்கெல்லாம் புத்தி வராது. உன் சண்டையெல்லாம் போயி எவன் உன்கிட்ட பணம் கொடுத்தானோ அவன்ட்ட வச்சுக்க. இங்க நின்னு சத்தம் போட்ட போலீசுக்கு ஃபோன் போட்ருவேன்னு சொன்னதுதான் தாமதம் அடுத்த நொடியே அங்கிருந்து தெறித்து ஓடி விட்டார் சுமதி.

இதேபோல எழில் நகர், அம்பேத்கார் உள்ளிட்ட பல பகுதிகளில் கள்ள நோட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எழில் நகரில் தினகரன் அணிக்கு பொறுப்பாளரா இருந்தவர் அம்பத்தூர் எம்.எல்.ஏ அலெக்ஸாண்டர். அம்பேத்கார் நகருக்கு பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் ரமணா.

தினகரன் தரப்பில் இருந்தே கள்ள நோட்டு வந்ததா, இல்லை இடையில் இருந்தவர்கள் இந்த தகிடுதத்தத்தை செய்தார்களா என்று ஆர்.கே.நகர் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். திருப்பி வந்தால் தொடப்ப கட்டையாலையே போட்டு தாக்கும் வெறியில் உள்ளனராம் தொகுதி பெண்கள்.

Related Topics: Tamilnadu News