போன வாரம் தீபாவிடம் விளம்பர கேட்க சென்றவர் இந்த வாரம் தி.மு.க.,வேட்பாளர்! ஆர்.கே.நகர் தேர்தல் அதிசயம்!

தி.மு.க.,வில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருது கணேஷ்,  முன்னாள் தினகரன் பத்திரிக்கை நிருபர். கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வந்த பிறகு நிருபர் பணியை விட்டார். இருந்தாலும் தினகரன் பத்திரிக்கைக்கு விளம்பரம் வாங்கி கொடுக்கும் பணியை செய்து வந்தார்.

இந்நிலையில், ஜெ.,அண்ணன் மகள் ஆரம்பித்துள்ள தீபா பேரவை சார்பில் தினகரனுக்கு விளம்பரம் சேகரிக்க கடந்த வாரம் தீபாவை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் அவரே எதிர்பார்க்காமல் ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க.,வேட்பாரளாக மருதுகணேசை, தி.மு.க.,அறிவித்தது. இப்போ தீபாவை எதிர்த்து போட்டி போடுகிறார்.

Related Topics: Tamil Online News Live