சசிகலாவை சமமாக கருதாத ஸ்டாலின்! ஸ்டாலின் தன்னை கண்டித்து அறிக்கை விடமாட்டாரா என கவலை?

திமுக தலைவர் கருணாநிதி, “ஆர்க் ரிவலான” அதிமுகவை மட்டுமின்றி சிறிய கட்சியினரையும் சூழலுக்கு ஏற்றவாறு அவ்வப்போது விமர்சிப்பார்.

அதே நேரம் தனக்கு சரி நிகரான போட்டியாளராக ஜெயலலிதாவை மட்டுமே கருதுவார்.

அதே போல் ஜெயலலிதா தப்பி தவறிக் கூட திமுக அல்லாத கட்சிகளின் பெயரையோ, அதன் தலைவர்களின் பெயரை உச்சரிக்க  மாட்டார்.

திமுகவையும் அதன் தலைவர் கருணாநிதியையும் மட்டுமே தனக்கு சரிசமமான போட்டியாளராக கருதுவார்.

ஆனால் இந்த நிலை தற்போது மாறிவிட்டது. திமுகவை பொருத்தவரை ஸ்டாலின் செயல் தலைவர் ஆகிவிட்டார்.

ஆனால் அதிமுக தலைமை மீது அதிருப்தி நிலவுவதால், திமுக, தங்களை எதிரியாக கருத வேண்டும் என சசிகலா விரும்புகிறாராம்.

இதன் பேரிலேயே ஜல்லிகட்டு விவகாரத்தில் ஸ்டாலினை  கண்டித்து காட்டமாக அறிக்கை வெளியிட்டார் சசிகலா.

ஆனால் இதற்கு ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது கூட” நான் முதலமைச்சருடன் பேசிவிட்டேன் ” என ஸ்டாலின் பதில் அளித்தார்.

அதே போல் முன்னர் பன்னீர் செல்வத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின். இதனால் தன்னை சரிசமமாக கருதி ஸ்டாலின் கண்டிக்காதது, சசிகலா தரப்பினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

Related Topics : Online Tamil News

LEAVE A REPLY