சென்னையில் மீண்டும் புயல் அபாயம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

பொங்கல் பண்டிகைக்கு முன்பு வர்தாவை தொடர்ந்து மற்றொரு புயல் சென்னையை தாக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 12ம் தேதி வீசிய வர்தா புயல் சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களை வெகுவாக பாதித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மின்சாரம், தகவல் தொழில்நுட்பம் பெரிதும் பாதிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை திரும்ப சில தினங்கள் ஆனது. வர்தா புயலின் சோகமே இன்னும் மறையாத நிலையில் மீண்டும் பொங்களுக்கு முன்பு மற்றொரு புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மீண்டும் புயல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு தெற்கே பூமத்திய ரேகையை ஒட்டி இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இது படிப்படியாக வலுப்பெற்று, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, அந்தமான் அருகே வலுப்பெற்று புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு புயல் உருவானால் வரும் 11ஆம் தேதி சென்னை, நெல்லூர் அருகே இந்த புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை மையத்தினர் கணித்துள்ளனர்.

Related Topics – Tamilnadu

LEAVE A REPLY