சசி.,விசுவாசிகளுக்கு மீண்டும் அமைச்சர் பதவி..!? ஓ.பி.எஸ்.,சை சபாநாயகராக்கி டம்மியாக்க திட்டம்..!?

சசிகலா முதல்வராக பதவியேற்கும் வேளையில் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளார்.

பன்னீர்செல்வதை சபாநாயகர் பதவி கொடுத்து டம்மியாக்கி வைக்கவும். சசி.,பொதுச்செயலாளராக முதலில் எதிர்ப்பு தெரிவித்த செங்கோட்டையனுக்கு வாக்கு கொடுத்தபடி மீண்டும் அமைச்சர் பதவி வழங்குவது என்றும்.

சபாநாயகர் தனபாலுவை அமைச்சரவையில் சேர்க்கவும். போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரைவையில் இருந்து எடுத்து விட்டு அவருக்கு கரூர் மாவட்ட செயலாளர் பதவி வழங்கிவிட்டு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வழங்குவது என்றும் முடிவு செய்துள்ளார் சசிகலா.

மேலும் யார் யாரை மாற்றலாம் என சசிகலா தீவிரமாக ஆலோசித்து வருவதாக போயஸ் கார்டன் வட்டார தகவல் தெரிவிக்கிறது.

Related Topics: Tamil Online News Live 

LEAVE A REPLY