தீபாவை அரசியலுக்கு இழுக்கும் தி.மு.க.,வினர்..! தமிழக அரசியலில் புதிய திருப்பம்..! சசிகலா, ஸ்டாலின் கலக்கம்..!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அ.தி.மு.க.,வின்  பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் கட்சியினர், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பின்னால் அணிவகுக்கத் துவங்கி உள்ளனர்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க., தொண்டர்கள், சென்னை, தி.நகரில் உள்ள தீபாவின் இல்லம் நோக்கிச் சென்று, அவரை தீவிர அரசியலில் இறங்கி, சசிகலாவை வீழ்த்த வேண்டும் என, கோரிக்கை வைக்கின்றனர்.

அவர்களிடம் நம்பிக்கையான வார்த்தைகளை, ஜெயலலிதாவை விட மென்மையாகவும்; பொறுமையாகவும் கூறி வருகிறார் தீபா.

இந்நிலையில், தி.மு.க.,வின் தலைவர் பதவிக்கு ஈடான பதவியாக செயல் தலைவர் பதவி உருவாக்கி, அதில் சகல அதிகாரங்களையும் உள்ளடக்கி, சர்வ வல்லமை படைத்த தலைவராக ஸ்டாலின் தன்னை காட்டிக் கொள்வது, கட்சிக்குள்ளேயே சிலருக்கும் பிடிக்கவில்லை.

தொண்டர்கள் சிலர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.ஸ்டாலினுக்கு பிடிக்காத; ஸ்டாலினை பிடிக்காத தொண்டர்கள், அக்கட்சியில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளனர். தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும், சென்னையின் பல்வேறு லாட்ஜ்களிலும் தங்கி இருந்து, தீபாவை அரசியலுக்கு இழுக்கும் வேலையை சரியாக செய்து வருகின்றனர்.

இது குறித்து, தீபா ஆதரவாளர்கள் கூறியதாவது:முதலில் அ.தி.மு.க., தொண்டர்கள்தான், நாள்தோறும் தீபா இல்லத்துக்கு வரத் துவங்கினர்.

இப்போது, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலரும்; மாவட்ட நிர்வாகிகள் பலரும், ஸ்டாலின் தலைமையை ஏற்க முடியாமல், தீபாவை நோக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

இதைத் தடுக்க, தி.மு.க.,வும் முயற்சிப்பதாகவும் சொல்கின்றனர். மொத்தத்தில், தமிழக அரசியல், கடும் பரபரப்புடன் நகர்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Topics: Tamil Online News Live 

LEAVE A REPLY