கள்ளக் காதலனுடன் தாய் நிர்வாணமாய்… பார்த்துவிட்ட குழந்தை! கொடூரக் கொலை!

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த முகம்மது அலி தனது முதல் மனைவி ஆஷாவை பிரிந்து, இரண்டாவது மனைவியான சகிலா பானுவுடன் வாழ்ந்து வந்தார்.

ஆஷாவிற்கு பிறந்த குழந்தையான இரண்டரை வயது ஆத்திப்பாவை முகமது அலி தன்னுடன் வைத்திருந்தார்.

அந்த குழந்தையை சகிலா பானு பராமரித்து வந்தார். இந்நிலையில்  திடீரென குழந்தையை காணோம் என்று காவல்நிலையத்தில் முகமது அலி புகார் செய்தார்.

அதே நேரம் வீட்டின் குழாயில் வந்த தண்ணீரில் துர்நாற்றம் வீச, தண்ணீர் தொட்டிக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு குழந்தை இறந்த நிலையில் மிதந்துள்ளது.

இதனையடுத்து புகாரின் பேரில் வீட்டிற்கு வந்த போலீசார் மொட்டை மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து   குழந்தையின் சடலத்தை மீட்டனர்.

அந்த தண்ணீர் தொட்டி 6 அடி உயரத்தில் இருந்ததால் பெரியவர்களே ஏணி இல்லாமல் ஏற முடியாது.

ஆனால் குழந்தையின் சடலம்  தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டபோது, அங்கு எந்த ஏணியும் இல்லை.

இதனால் குழந்தை நிச்சயம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவிற்கு போலீசார் வந்தனர்.

முகமது அலியின் இரண்டாவது மனைவி சகிலா பானு மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் பூவராகமூர்த்தி என்பவரிடம் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையின் போது, மூர்த்திக்கும், அந்த பெண்ணிற்கும் கள்ளத் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இருவரும் ஒன்றாக இருந்ததை அந்த குழந்தை பார்த்து விட்டதால் அந்த குழந்தையை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

Related Topics : Online Tamil News

LEAVE A REPLY