Monday, January 23, 2017
மெரினாவில் உள்ள போராட்டக்காரர்களை வெளியேற்ற காவல்துறையினர் கல்வீச்சு தடியடி போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என பலர் காயமடைந்தனர். மெரினாவில் இருந்து வெளியேற்றப்பட்ட போராட்டக்காரர்கள் மீண்டும் கடல்வழியாக மெரினாவில் போராட்டத்தில் இணைந்தனர். மெரினாவிற்குள் கூட்டம் சேராமல் இருக்க அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டன. தற்போது, போராட்ட களத்தில் இருப்பவர்களை கலைக்க கல்வீச்சு, தடியடி என்று அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Related Topics - Tamilnadu