இந்துகளை புண்படுத்திய தோனியின் விளம்பரம்? வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டன் தோனி மீதான கிரிமினல் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன தோனி சில வருடங்களுக்கு முன்பு ஒரு பிரபல தனியார் நிறுவனத்தின் வியாபாரத்தை பெருக்க, இந்து கடவுள் விஷ்ணு போல போஸ் கொடுத்தார்.

இது  இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளதாக அப்போது ஆந்திர நீதிமன்றத்தில், தோனி மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில்  இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதை விசாரித்த நீதிபதி, அந்த விளம்பரத்தில் இந்து மத உணர்வுகள் எந்த விதத்திலும்  தோனி  புண்படுத்தப்படவில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

Related Topics – Cricket News