‘தல’ தோனியை தப்பா பேசுனா தாறுமாறு ஆகிடும் – கடுப்பானார் ரெய்னா !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை போன்ற சிறந்த வீரர்களுக்கு உண்டான மரியாதையை கொடுக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் புனே அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இதுவரை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால் அவருக்கு நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கங்குலி மற்றும் கபில்தேவ்  உள்ளிட்டோர் தோனிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தாலும், ஸ்டோக்ஸ், வார்னர், சேவாக் உள்ளிட்ட பலர் தோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். தற்போது தோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் வரிசையில் சுரேஷ் ரெய்னாவும் இணைந்துள்ளார்.

இது குறித்து ரெய்னா கூறுகையில்;

தோனி மீதான விமர்சனங்கள் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்திய கிரிக்கெட் அணிக்காகவும் சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் அவர் நிகழ்த்திய சாதனைகளை யாரும் மறந்துவிட கூடாது. அதனால் அவருக்கு மரியாதை அளிப்பது நமது கடமையாகும். ஒரு வீரர் தனது சோதனை காலத்தில் தனக்கு ஆதரவான வார்த்தைகளை கேட்க விரும்புவார். ஆனால் தோனி தனக்கு எதிராக வரும் கடுமையான விமர்சனங்களை எப்படி பொறுத்துக்கொள்கிறார் என்பது தெரியவில்லை. தோனியுடன் இணைந்து மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற ஜெர்சியில் விளையாட ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Topics – Cricket News