சிக்ஸ் அடிப்பது எனக்கு சாக்லேட் சாப்பிடுவது மாதிரி ; இது கெய்ல் பன்ச் !

சிக்ஸர் அடிப்பது தனக்கு சாக்லேட் சாப்பிடுவதை போன்று பிடிக்கும் என்று வெஸ்ட் இண்டிஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் பத்தாவது சீசனில் நேற்று குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் 3 ரன்கள் எடுத்தபோது ஒட்டுமொத்த டி.20 அரங்கில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் நேற்றைய போட்டியில் பழைய பார்மிற்கு திரும்பிய கிறிஸ் கெய்ல் 38 பந்துகளுக்கு 7 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

இந்நிலையில் இது குறித்து கெய்ல் கூறுகையில் “ போட்டிக்கு முன் சாமுவேல் பத்ரி இந்த சாதனை குறித்து என்னிடம் தெரிவித்தார். டி-20 அரங்கில் 10,000 ரன்கள் என்ற சாதனையை எட்டிய முதல் வீரர் என்பதில் மகிழ்ச்சி.  குறிப்பாக மீண்டும் பார்முக்கு வந்ததில் சந்தோஷம். சிக்சர் அடிப்பது எனக்கு சாக்லேட் சாப்பிடுவது போல ரொம்ப பிடிக்கும். எஞ்சியுள்ள நாட்களில் இன்னும் சில ஆயிரம் ரன்களை சேர்க்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கிறிஸ் கெய்ல் அளித்த மற்றொரு பேட்டி ஒன்றில் தனது மன தைரியத்தால் பல் குத்தும் குச்சியால் கூட சிக்ஸர் அடிப்பேன் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Topics – Cricket News