என் பணத்தை கொடுங்க பிசிசிஐ -யிடம் போராடும் யுவராஜ் சிங்.! நடந்தது என்ன தெரியுமா..!!

என் பணத்தை கொடுங்க பிசிசிஐ -யிடம் போராடும் யுவராஜ் சிங்.! நடந்தது என்ன தெரியுமா..!!

இந்தியாவுக்கு 2011ல் உலகக் கோப்பை கிடைப்பதற்கு முக்கிய பங்கு வகித்த அதிரடி நாயகன் யுவராஜ் சிங்.

இவருக்கு பிசிசிஐ தர வேண்டிய, ரூ.3 கோடியை கேட்டு நடையாய் நடந்து வருகிறார்.

பிசிசிஐ விதிகளின்படி இந்தியாவுக்காக விளையாடும்போது காயம் ஏற்படும் வீரர்கள் ஐபில் போட்டியில் பங்கேற்க முடியாவிட்டால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக போட்டிகளில் விளையாடபோது யுவராஜ் சிங் காயமடைந்தார்.

அதனால் அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக 7 ஆட்டங்களில் விளையாட முடியவில்லை.

இதற்கான இழப்பீடு கேட்டு ஒன்றரை வருடமாக போராடி வருகிறார். அதே நேரத்தில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய ஆஷிஷ் நெஹ்ரா இந்த இழப்பீடு தொகையை வாங்கிவிட்டார்.

மேலும் யுவராஜ் சிங் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் தனக்கு இடம் கிடைக்க வேண்டும் என்று போராடி வருகிறார்.

Related Topics:Cricket News