இந்த மாதிரி ஊருக்கு எங்கள கூப்டாதீங்க… ஐ.சி.சி,யிடம் இலங்கை புகார் !!

இந்த மாதிரி ஊருக்கு எங்கள கூப்டாதீங்க… ஐ.சி.சி,யிடம் இலங்கை புகார் 

இந்தியாவுக்கு எதிராக டெல்லி காற்றுமாசுபாடு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இதில் டெல்லியில் நடைபெற்ற இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது கடுமையான காற்று மாசுபாடு காரணமாக இரு அணி வீரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக இலங்கை வீரர்கள் முகத்தில் முகமூடி அணிந்து கொண்டே விளையாடினர், இதன் காரணமாக சில இலங்கை வீரர்களுக்கு மூச்சு திணறல் மற்றும் வாந்தி ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், இது போன்ற மைதானங்களை இனி தேர்ந்தெடுக்க வேண்டாம் என்றும் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயசேகரா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்துள்ளார்.