இந்திய  கேப்டன் கோஹ்லிக்கு அடுத்த வாரம் திருமணம்..?

இந்திய  கேப்டன் கோஹ்லிக்கு அடுத்த வாரம் திருமணம்..?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி அடுத்த வாரம் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியை கம்பீரமாக வழிநடத்தி வரும் கேப்டன் கோஹ்லியும், பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட காலமாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி.20 தொடரில் இருந்து ஓய்வு கேட்டுள்ள கோஹ்லி, அடுத்த வாரம் இத்தாலியில் வைத்து தனது காதலி அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கு கோஹ்லியின் முக்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், 21ம் தேதி மும்பையில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக கோஹ்லி நாளை இத்தாலி கிளம்ப உள்ளதாகவும், அனுஷ்கா சர்மாவிற்கான திருமண ஆடை பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஒருவரால தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதே போல் கடந்த வருட டிசம்பர் மாதமும் கூறப்பட்டு அதனை கோஹியும் அனுஷ்காவும் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.