விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு..! ஆச்சரியத்தில் மூழ்கிய கிரிக்கெட் வட்டாரங்கள்…!!

விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு..! ஆச்சரியத்தில் மூழ்கிய கிரிக்கெட் வட்டாரங்கள்…!!

கேப்டன் விராட் கோலியின் கீழ் சிறப்பாக விளையாடும் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து உலகின் நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது.

மேலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக கோலி பலரால் புகழப்படுகிறார். இந்நிலையில் கோலி தன்னை பலர் பின்பற்றுவதால் இனிமேல் தவறான் விஷயத்தில் ஈடுபடபோவதில்லை என கூறியுள்ளார்.

மேலும் இனிவரும் காலங்களில் குளிர்பான விளம்பரங்களில் நடிக்கபோவதில்லை என அறிவித்துள்ளார்.

தான் பயன்படுத்தாத எந்த பொருட்களின் விளம்பரங்களிலும் இனிமேல் நடிக்க போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

ஐபில் போட்டிகள் வரும் போது விளம்பரங்களில் நடிக்க வேண்டிய சூழல் வந்தாலும் நான் எனது முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன்.

இந்த முடிவே இறுதியானது என அவர் அறிவித்துள்ளார். கோலியின் இந்த முடிவை ஆச்சர்யத்தோடு பலர் பார்க்கின்றனர்.

மேலும் இது மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கும் சிறந்த முன் உதாரணமாக அமையும் என கூறப்படுகிறது.

Related Topics:Cricket News