முதல் ஆளாக சாம்பியன் டிராபிக்கு தயாரானது தென் ஆப்ரிக்கா !

சாம்பியன் டிராபியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை தென் ஆப்ரிக்க அணி அறிவித்துள்ளது.

மினி உலகக்கோப்பையான சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்தில் ஜூன் மாதம் துவங்க உள்ளது. இதில் போட்டியை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணியும், ஐசிசி., யின் முழுநேர உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இந்தியா,  ஆஸ்திரேலியா,  தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 7 அணிகளும் இத்தொடரில் பங்கேற்கின்றன.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை தென் ஆப்ரிக்க அணி இன்று அறிவித்துள்ளது.

டி.வில்லியர்ஸ் தலைமையிலான 15 வீரர்கள் பட்டியல்;

ஆம்லா, டி காக், டுபிளசி, டி.விலியர்ஸ், டுமினி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், வேயின் பார்னெல், காகிசோ ரபாடா, இம்ரான் தாஹிர், கேசவ் மகராஜ், பிரிட்டோரியஸ், பர்ஹான் பெஹர்தின், மார்னே மார்கல்.

Related Topics – Cricket News