ஹர்திக் பாண்டியாவுக்கு ஓவர் சீன் எல்லாம் கொடுக்காதீங்க… கடுப்பான முன்னாள் வீரர் !!

ஹர்திக் பாண்டியாவுக்கு ஓவர் சீன் எல்லாம் கொடுக்காதீங்க… கடுப்பான முன்னாள் வீரர்

இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்னும் கபில் தேவ் உடன் ஒப்பிடும் அளவுக்கு வரவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்க சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் எளிய இலக்கை துரத்திய போதும் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இரு அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை செஞ்சுரியனில் துவங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் முதல் டெஸ்டில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்திய இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை பல முன்னாள் வீரர்களும் முன்னாள் கேப்டன் கபில் தேவுடன் ஒப்பிட்டு பேசினர்.

ஆனால், கபில் உடன் சேர்ந்து விளையாடிய முன்னாள் வீரர் கர்சன் காவ்ரி, கபில் தேவுடன் ஒப்பிடும் அளவுக்கு ஹர்திக் பாண்டியா இன்னும் சாதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்சன் காவ்ரி கூறுகையில்,’ தற்போது கபில் தேவுடன் ஒப்பிடும் தூரத்துக்கு கூட ஹர்திக் பாண்டியா சாதிக்கவில்லை. இன்னுன் அவர் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. கபில் தேவின் சாதனைகளை ஹர்திக் பாண்டியாவால் எட்ட முடியுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.’ என்றார்.