மேக்ஸ்வெல்லுக்கு மரண பயத்தை காட்டிய பும்ராஹ் ! நூலிழையில் தப்பித்த மேக்ஸ்வெல்!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், மும்பை வீரர் பும்ராஹ் வீசிய பவுன்சர் பஞ்சாப் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் முகத்தை பதம் பார்க்க தெரிந்தது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை  செய்து வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு, கேப்டன் மேக்ஸ்வெல் களமிறங்கிய போது, மும்பை அணியின் பும்ராஹ், போட்டியின் 14வது ஓவரை வீசினார். இதன் முதல் பந்து மேக்ஸ்வெல்லின் பேட்டில்பட்டு முகத்தை பதம் பார்க்க தெரிந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இதில் மேக்ஸ்வெல்லுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

இதற்கு பழீ தீர்க்கும் வகையில் மெக்லீங்கன் வீசிய 15வது ஆட்டத்தின் 15வது ஓவரில் 3 சிக்ஸர் 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சேர்த்தார்.

இந்த போட்டியில் 199 ரன்களை  மும்பை அணிக்கு பஞ்சாப் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்த போதும் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் படுதோல்வி அடைந்தது பஞ்சாப்.

Related Topics – Cricket News