மும்பை பந்துவீச்சை அசராமல் அடித்து துவைத்த ஆம்லா… மும்பைக்கு 199  ரன்கள் இலக்கு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஹசீம் ஆம்லா – மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தின் மூலம் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி   ரன்கள் எடுத்துள்ளது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனில் இன்று இந்தூரில் நடைபெற்று வரும் லீக் போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்து வருகின்றன.

இதில் டாஸ் வென்ற மும்பை  இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் சேன் மார்ஷ் 21 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் சஹா 11 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார்.

 

இதனையடுத்து மூன்றாவது  விக்கெட்டுக்கு கூட்டணி சேர்ந்த ஆம்லா மேக்வெல் ஜோடி மும்பை அணியின் பந்துவீச்சை நாளா பக்கமும் சிதறடித்து மளமளவென ரன் குவித்தது. 18 பந்துகளில் 3 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ராஹ் பந்துவீச்சில் போல்டானார். அவரை தொடர்ந்து வந்த ஸ்டோனிஸ்  1 ரன்னில் விக்கெட்டை இழந்து வந்தவேகத்தில் வெளியேறினார்.

மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அந்த அணியின் மற்றொரு துவக்க வீரர் ஆம்லா இறுதிவரை 60 பந்துகளுக்கு 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 104* ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த பஞ்சாப் அணி 198 ரன்கள் எடுத்துள்ளது.

Related Topics – Cricket News