தல தோனியை புகழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள் !!

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்த தோனி கடந்த 4ஆம் தேதி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தோனியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் சாஹித் அப்ரிடி, சொயிப் அக்தர் உள்ளிட்டோர் புகழ்ந்து  பேசியுள்ளனர்.

சாகித் அப்ரிடி;

கிரிக்கெட் வீரர்களுக்கு தோனி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,இந்திய கிரிக்கெட் அணியை செதுக்கியதில் தோனிக்கு பெரும் பங்கு உள்ளது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி கூறினார்.

அக்தர்

தோனி மிகவும் பணிவுடனும், கண்ணியமுடனும் கேப்டன் பதவியை விட்டு விலகியிருக்கிறார். அவரது முடிவை நாம் நிச்சயம் மதிக்க வேண்டும்.

Related Topics – Cricket News

 

 

 

 

LEAVE A REPLY