சவுரவ் கங்குலிக்கு கொலை மிரட்டல்!

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 19ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தின் மித்னாப்பூரில் உள்ள வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கங்குலி கலந்துகொள்ள உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் கங்குலி கொலை செய்யப்படுவார் என அவருடைய தாய்க்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. கங்குலி கலந்துகொண்டால் அவரை நீங்கள் உயிருடன் பார்க்க முடியாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் கடந்த 7ம் தேதியன்று கிடைத்ததாகவும், இதன்பேரில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கங்குலிக்கு, இதுபோன்று மிரட்டல் கடிதம் வருவது முதல்முறையல்ல. இதற்கு முன்பு 2008ஆம் ஆண்டில் இரண்டு முறை கொலை மிரட்டல் கடிதம் வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அது யார்? என்பது கண்டுபிடிக்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அதுபோல் மிரட்டல் வந்துள்ளது.

Related Topics – Sports

LEAVE A REPLY