சிறை காவலர்களுக்கு ஆப்பு வைத்த உ.பி.முதல்வர் – மீறினால் நடவடிக்கை!

உத்தர பிரதேசத்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகள் அனைவருக்கும் சமமான முறையில் ஒரே உணவையே வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தின் வளர்ச்சிப் பணி குறித்து உள்துறை, காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, உ.பி. சிறையில் இருக்கும் கைதிகள் சிறைத்துறை அதிகாரிகள் துணையுடன் செல்போன்கள் உள்பட பல வசதிகளை அனுபவித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. அதை தவிர்க்க, சிறைக்குள் அடிக்கடி திடீர் சோதனைகள் நடத்தவேண்டும்.

சிறைக்குள் இருக்கும் பெரிய குற்றவாளிகள் முதல் சிறு குற்றவாளிகள் வரை அனைவருக்கும் ஒரே உணவு வழங்கி சமமாக நடத்தப்பட வேண்டும். மேலும் மோசமான கிரிமினல் குற்றவாளிகள் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் பொய் சாக்குகள் கூறிக்கொண்டு சலுகைகள் அனுபவிப்பதை அனுமதிக்க முடியாது.

போலீசார் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடாத வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். மேலும் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் சிறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related Topics – Top News