தலைநகர் டெல்லியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! 

தலைநகர் டெல்லியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! 

இந்திய தலைநகர்  டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பல இடங்களில் இன்று இரவு 8.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக  தலைநகர் டெல்லி, ஹரியானா, உத்தரகண்ட்,  டெஹ்ராடூன்,  ஹிமாச்சலபிரதேசம் ஆகிய இடங்களில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் புவி மையம் அறிவித்துள்ளது.

ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் சிறிது நேரம் தங்களது வீடுகளை விட்டுவிட்டு  சாலையில் தஞ்சம் அடைந்தனர்.