பெண்கள் பாதபூஜை..சர்ச்சையில் முதல்வர்..!

கோவில் விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட மாநில முதல்வருக்கு பெண்கள் பாதபூஜை செய்த விவகாரம் அந்த மாநில முதல்வருக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்ண்ட் மாநில முதல்வராக இருப்பவர் ரகுபர்தாஸ். ஜாம்ஜெட்பூரில் உள்ள பிரம்ம லோக் தம் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை குரு பூர்ணிமா விழா நடந்தது. அதில் கலந்து கொள்ள தலைமை அழைப்பாளராக முதல்வர் அழைக்கப்பட்டிருந்தார்.

அவர் கோவிலுக்கு வந்தபோது பெரிய தாம்பாளத்தில் முதல்வர் ரகுபர்தாசை நிற்க வைத்து பெண்கள் அவரது பாதங்களை கழுவி ரோஜா மலர்களால் பூஜை செய்தனர். அவ்வாறு பெண்கள் பாதபூஜை செய்த வீடியோ பதிவு சமூக வளைதளங்களில் பரவியது.

அந்த வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் முதல்வர் ரகுபர்தாசின் பாதபூஜை செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் மேல்தட்டு மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் விழா ஏற்பாட்டாளர்கள் கூறும்போது, முதல்வர் மேல்தட்டு மனப்பான்மையுடன் நடந்து கொண்டார் என்பது தவறான கருத்தாகும். இது அவருக்காக நடத்தப்பட்ட சிறப்பு பூஜை அல்ல. யார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாலும் செய்யும் வழக்கமான ஒன்று. இத அரசியலாக்கப்பார்க்கிறார்கள் என்றார்கள்.

எப்படியோ பாதபூஜை விவகாரத்தில் ஜார்க்கண்ட் முதல்வரின் பெயர் உருள்கிறது.

Related Topics : National News