நோய்களை குறைக்க வனத்துக்கு போங்க..

மன அழுத்தம் மற்றும் நோய்களை குறைப்பதற்கு வனத்துக்கு சென்று வந்தாலே போதுமானது. இந்த உலகத்தில் அறிவியல் ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக எத்தனையோ மாற்றங்களைக் கண்டு வந்தாலும் அந்த மாற்றங்கள் எல்லாமே வளர்ச்சியை நோக்கி பயணிக்க போகிறது என்று உறுதியாக சொல்ல முடியாது.

உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2020ம் ஆண்டுகளில் மனிதனின் வாழ்க்கையை முடக்கும் நோய்களில் மன அழுத்தம்தான் முதலிடத்தில் இருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு ஜப்பான் நாட்டில் முன்கூட்டியே தீர்வு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். மரங்கள் நிறைந்த இடங்களில் காலை நேரத்தில் நடைபயிற்சி செய்வது அவசியமில்லை. நீங்கள் ரிலாக்ஸாக இருப்பதற்கு இயற்கையுடன் இணைந்தாலே போதும்.

வனத்திற்கு சென்று மரத்துடன் நேரத்தை செலவிட்டால் நமது உடல் மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இதன் மூலம் ரத்த அழுத்தம், மன உளைச்சலுக்குக் காரணமான ஹார்மோன்களின் உற்பத்தியை குறைக்கின்றன. வனத்தில் தூய்மையான காற்றை சுவாசிக்கலாம்.

அது மட்டும் இல்லாமல் மரங்கள் பிடோனிஸிட்ஸ் எனப்படும் ஒருவகையான எண்ணெயை வெளியேற்றுகிறது. இதன் மூலம் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

எனவே நாமும் மன அழுத்தத்தை குறைப்பதற்காக வனத்தை நோக்கி பயணிக்கலாமே, மாதத்திற்கு ஒரு முறையாவது சென்று வரலாமே.

Related Topics:Health News