ஓடும் பஸ்சில் சில்மிஷம்! உச்சத்திற்கே சென்ற இளம்ஜோடி! முகம் சுழித்த பயணிகள்!

ராசிபுரத்தில் இருந்து கோவைக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. அப்போது ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு கோவை நோக்கி கிளம்பியது.

அப்போது அந்த பஸ்சில் ஒரு இளம்ஜோடி ஏறியது. பஸ்சில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் அவர்கள் விரும்பிய சீட்டில் அமர்ந்து கொண்டனர்.

பஸ் கிளம்பியதில் இருந்து இருவரும் சிரித்து பேசுவதும், ஒருவர் மீது ஒருவர் விழுந்து மகிழ்ந்தபடி இருந்தனர். ஜன்னல் ஓரத்தில் அந்த பெண் அமர்ந்திருந்ததால்  பெண்ணின்  தலைமுடி காற்றில் பறந்தது.

அப்போது அவர் அருகில் இருந்த வாலிபர் பெண்ணின் தலைமுடியை கோதியபடி கொஞ்சி கொண்டே வந்தார். பதிலுக்கு அந்த பெண், வாலிபர் கன்னத்தில் இருந்த வியர்வையை தனது சேலையால் துடைத்து விட்டார்.

இருவரும் பஸ்சில் பயணம் செய்வதையே மறந்து, எங்கோ காதல் வானில் சிறகடிக்க தொடங்கினர். காதல் கனவில் மிதந்த இருவரும் மாறி மாறி முத்தமிட ஆரம்பித்தனர்.

இந்த இளம்ஜோடிகளின் அத்துமீறிய காதல் லீலைகளை பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பார்த்து முகம் சுழித்தனர். ஆனாலும் இருவரும் அதை கண்டு கொள்ளவே இல்லை.

இந்நிலையில் பஸ் அவினாசி வந்ததும் இருவரும் மாறி மாறி ஒருவரது மடியில் ஒருவர் 10 நிமிடம் படுத்து கொள்ள காதல் லீலை உச்சத்திற்கே சென்று அந்த பஸ்ஸை காதல் வாகனமாகவே மாற்றிவிட்டனர்.

புதுமண தம்பதியாகவே இருக்கட்டும்? அதுக்காக இப்படியா ஓடும் பஸ்சில் அனைவரது மத்தியிலும் கொஞ்சி குலாவுவது என்று முணு முணுத்தப்படியே பயணிகள் தங்கள் பயணத்தை தொடர்ந்திருக்கிறார்கள்.

புது மண தம்பதிகளோ அல்லது காதல் ஜோடிகளோ பொதுவெளியில் கொஞ்சம் நாகரீகமாக நடந்து கொள்வது நல்லது.

Related Topic : Don’t miss