கனடாவில் திடீரென தோன்றிய பனிப்பாறை..! ஆச்சரியத்துடன் கண்டுகளித்த மக்கள்..!

கனடாவின் நியூபவுண்ட்லாந்து பகுதியில் 150 அடி உயரத்தில் திடீரென பனிப்பாறை தோன்றியது. இந்த பனிப்பாறையை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.

நியூபவுண்ட்லாந்து – லாப்ராடோர் பகுதிகளுக்கிடையே இந்த ராட்சத பனிப்பாறை தோன்றியுள்ளது. பொதுவாக கடலுக்கு அடியில் அல்லது கடலின் மேற்பரப்பில் சிறிய அளவிலான பனிப்பாறைகள் தோன்றுவது வழக்கம்.

வசந்தகால சமயத்தில் பனிப்பாறைகள் இடம்பெயரும். தற்போது வசந்தகாலம் தொடங்கியுள்ள நிலையில், பெர்ரிலாண்ட் பகுதியில் இருந்து 150 அடி உயரத்திலான இந்த பனிப்பாறை நகர்ந்து நியூபவுண்ட்லாந்து பகுதிக்கு வந்துள்ளது.

ராட்சத பனிப்பாறையை ஆச்சரியமாக பார்க்கும் மக்கள், பனிப்பாறையை ரசித்து போட்டோ எடுத்து வருகின்றனர்.

புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களினால் ஆர்டிக் பகுதியில் பனிப்பாறைகள் அவ்வப்போது உருகிவருவது குறிப்பிடத்தக்கது.

Related Topics: International news