Monday, January 23, 2017
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்களின் இந்த அறப்போராட்டம் தீவிரமடைந்ததால் ஜல்லிக்கட்டிற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்கள் நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறி போராட்டத்தை கைவிட மறுத்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். காவல்துறையின் இந்த அடாவடி செயலால் போராளிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். மேலும் சென்னை மெரினாவில் நடந்து வரும் சம்பவம் மீண்டும் ஒரு ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நினைவுகூர்வதாக இருக்கிறது. அஹிம்சை வழியில்...